திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் போதைப்பொருளுடன் கைது !

29 May, 2024 | 12:58 PM
image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் வத்தளை, ஹேகித்த  பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை, ஹேகித்த  பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சொத்துக்கள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களைத் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் கமரா, சமையல் எரிவாயு அடுப்பு, கையடக்கத் தொலைபேசி , 15,750 ரூபா பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேக நபரிடமிருந்து 04 கிராம் 200 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12
news-image

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் திருகோணமலையில்...

2024-07-19 19:58:48
news-image

வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக...

2024-07-19 18:30:03
news-image

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட...

2024-07-19 18:25:02
news-image

மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2024-07-19 19:57:08
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள்...

2024-07-19 17:36:02
news-image

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி...

2024-07-19 17:35:06
news-image

மூதூர் யுவதி கொலை : சந்தேக...

2024-07-19 20:38:20
news-image

22வது திருத்தம் குறித்த வர்த்தமானி ஜனாதிபதி...

2024-07-19 17:15:58
news-image

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக...

2024-07-19 17:34:54
news-image

ஜனாதிபதியின் செயற்றிட்டம் தொடர்பில் போலியான அறிக்கைகளை...

2024-07-19 16:42:29