ரபாவில் 45 பேரை பலி கொண்ட தாக்குதல்; - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குண்டே பயன்படுத்தப்பட்டது என்கின்றது சிஎன்என்

Published By: Rajeeban

29 May, 2024 | 11:38 AM
image

காசாவின் ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் அமெரிக்காவின் வெடிமருந்துகளை பயன்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதிவான வீடியோவை சிஎன்என் ஆய்வு செய்த வேளை இது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சிஎன்என் வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வின் மூலமும் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

காசாவின் தென்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பெரும் தீ மூண்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக 45க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரபாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு வட்டாரங்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

சிஎன்என் தன்னிடம் உள்ள வீடியோ காட்சிகள் ரபா முகாம் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கின்றது என குறிப்பிட்டுள்ளதுடன் , இரவு நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இருந்து தப்புவதற்கு பலர் முயல்வதையும் காணமுடிவதாக தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் உடல்கள் உட்பட எரிந்த உடல்களை இடிபாடுகளிற்குள் இருந்து மீட்பு பணியாளர்கள் வெளியில் எடுப்பதை அவதானிக்க முடிவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

குவைத் அகதி முகாம் 1 என அழைக்கப்படும் இந்த முகாமின் மீது  இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள  சிஎன்என் தெரிவித்துள்ளது.

சிஎன்என்னின் வீடியோவை ஆராய்ந்த வெடிகுண்டுகள் ஆயுத நிபுணர்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜிபியு 39 குண்டின் ஒரு பகுதியை காணமுடிவதாக தெரிவித்துள்ளனர்.

பொயிங் நிறுவனம் ஜிபியு39 குண்டுகளை தயாரிக்கின்றது.

மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு  இந்த குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என வெடிபொருள் ஆயுத நிபுணர் கிறிஸ்கொப் ஸ்மித்  சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவின் முன்னாள் உறுப்பினரான டிரெவெர் போல் குண்டு சிதறல்களை அடிப்படையாக வைத்து ஜிபியு39 குண்டே பயன்படுத்தப்பட்டுள்ளது என உறுதி செய்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்த...

2025-04-17 17:06:05
news-image

ஹவார்ட்டை இனிமேல் கற்றலிற்கான சிறந்த இடமாக...

2025-04-17 13:58:57
news-image

அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம்...

2025-04-17 10:38:27
news-image

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து மாணவர்களை...

2025-04-17 10:05:23
news-image

கொங்கோவில் படகு தீப்பிடித்து கவிழ்ந்து விபத்து...

2025-04-17 09:52:40
news-image

நஷனல் ஹெரால்ட் வழக்கு: ராகுல் சோனியா...

2025-04-16 15:19:00
news-image

ட்ரம்பின் நடவடிக்கையால் 2026 இல் யுனிசெப்பின்...

2025-04-16 14:33:33
news-image

பாக்கிஸ்தான் இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை...

2025-04-16 13:46:38
news-image

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு தடை - மாலைதீவு

2025-04-16 11:24:47
news-image

ஈராக்கில் மணல் புயல் : 4...

2025-04-15 20:54:05
news-image

ரஸ்யா தெரிவிப்பதை விட ரஸ்ய படையினர்...

2025-04-15 16:29:16
news-image

நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு...

2025-04-15 15:05:41