இலங்கையை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் - விசாரணைகளிற்காக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டம்

Published By: Rajeeban

29 May, 2024 | 11:03 AM
image

குஜராத் விமானநிலையத்தில் ஐஎஸ்;; உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேரைகைதுசெய்துள்ளது ,எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஜெராட் தேடப்படுகின்றார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவரை கைதுசெய்யபவர்களிற்கு சன்மானத்தை அறிவித்துள்ளது.

மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமானிநிலையத்தில் ஐஎஸ் சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைதுசெய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

மாநிலத்திற்கு வெளியே இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதில் குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவின் மூன்று குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் விசாரணைகளின் மூலம் ஒஸ்மன்ட் ஜெராட் என்ற நபர் நான்கு சந்தேகநபர்களிற்கும் நான்கு இலட்சம் ரூபாய்களை வழங்கியமையும், இந்த நபர் அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றுவதும் தெரியவந்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் இரண்டு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர் ஒஸ்மன்ட் ஜெராட் தலைமறைவாகியுள்ளார்  என குஜராத்தின் பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது இந்தியாவில் சந்தேகநபர்களின் நடவடிக்கைகளிற்கு மேலும் மூவர் உதவியமை தெரியவந்துள்ளது.

குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது இந்த நபர்கள்  குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என்று...

2024-06-15 18:12:22
news-image

தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை...

2024-06-15 18:29:03
news-image

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும்...

2024-06-15 16:55:52
news-image

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்...

2024-06-15 16:39:31
news-image

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய...

2024-06-15 16:56:44
news-image

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின்...

2024-06-15 15:11:12
news-image

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப்...

2024-06-15 15:43:02
news-image

அடுத்த வாரம் இலங்கை வருகிறார் இந்திய...

2024-06-15 15:18:37
news-image

10 ஆவது சர்வதேச யோகா தினத்தை...

2024-06-15 14:41:09
news-image

கண்டியில் சக மாணவனை கத்தியால் குத்திய...

2024-06-15 13:44:03
news-image

மயிலை வேட்டையாடி உண்ட வெளிநாட்டவர்களும் வேடுவ...

2024-06-15 14:40:39
news-image

இன்றைய மரக்கறி விலைகள்

2024-06-15 13:15:00