உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Published By: Digital Desk 7

29 May, 2024 | 10:10 AM
image

கொஸ்லந்த ஊவா மாவெலகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகத்தில்  ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊவா மாவெலகம, கம்பஹா, மதுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 நபரொருவரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக கொஸ்லந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன் போது, வீட்டில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் கீழ் கொஸ்லந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப டபிள்யூ. விக்கிரமசிங்க தலைமையிலான  குழுவினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46
news-image

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல்...

2024-06-23 18:07:07
news-image

நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று...

2024-06-23 16:46:21
news-image

யாழில் கையடக்க தொலைபேசி திருட்டு :...

2024-06-23 16:32:11
news-image

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல்...

2024-06-23 16:24:05
news-image

'ஸ்கோலியோசிஸ்' பற்றி பொது விழிப்புணர்வுக்காக சுகாதார...

2024-06-23 15:39:01
news-image

யாழ். இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய்...

2024-06-23 15:24:01
news-image

13 குறித்து பேச ஜே.வி.பிக்கு அருகதையில்லை...

2024-06-23 14:11:40
news-image

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எட்டு ஆண்டுகளில் 3.416...

2024-06-23 14:06:25
news-image

அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6...

2024-06-23 13:11:57