கண்டியில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான பிரபல வர்த்தகர் ஒருவர் 20 வயதுடைய நபரை கடத்திச் சென்று ஹோட்டல் அறையொன்றில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டல் உரிமையாளர் கண்டி பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றின் முன்னாள் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பதுடன் போலி ஆவணங்களை தயாரித்து மாணவர்களை அனுமதித்த குற்றச்சாட்டையும் அவர் சுமத்தியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்குச் சொந்தமான கண்டி, ரஜபிஹில்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் வரவேற்பாளராகப் பணியாற்றியவர் என பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பளம் வழங்கப்படாமையால் குறித்த இளைஞன் விடுதியை விட்டு வெளியேற விரும்புவதாகவும் சந்தேகநபர் அதற்கு அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பின்னர் குறித்த இளைஞன் ராஜினாமா கடிதத்தை கையளித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர் கெப் வண்டியில் வந்து இளைஞனை பலவந்தமாக அதில் ஏற்றி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஹோட்டல் அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம், குறித்த வர்த்தகரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் 27 ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவு நிலைய பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் நளீன் இந்திக்க உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM