தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு

Published By: Vishnu

29 May, 2024 | 01:07 AM
image

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய  சுன்னாகம் ஸ்கந்தவரோதயா  கல்லூரியின் கேட்போர் கூடகட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபாநிதி ஜனாதிபதியினால்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி இன்று  பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்காக விடுவிக்கப்பட்டு கட்டட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ம் ஆண்டு  சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்போதைய நல்லாட்சி அரசினால் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதோடு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின்  வேண்டுகோளுக்கிணங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  பாடசாலை பரிசளிப்பு நிகழ்வில்  கலந்து கொண்டு   புதிய கேட்போர் கூட கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்திருந்தார்.

நாட்டின் ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமாக குறித்த வேலை திட்டம் முடிவுறுத்தப்படாமை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணத்தில்  ஜனாதிபதி  கலந்து கொண்டமருத்துவ பீட புதிய கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் குறித்த  விடயம் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டதோடு முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டுவரப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன்  உடனடியாக ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  விடுத்த கோரிக்கையினையடுத்து   110 மில்லியன் ரூபா நிதியினை சுன்னாகம்  ஸ்கந்தவரோதயா  கல்லூரியின் கேட்போர் கூட கட்டிட நிர்மாணத்துக்காக ஒதுக்குமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதோடு மிகுதி 40 மில்லியன்  எதிர்வரும் வாரமளவில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'இளைஞர்களின் எழுச்சி' தொனிப்பொருளில் கண்டியில் இளைஞர்...

2024-06-23 19:16:51
news-image

மட்டக்களப்பு - பூனொச்சிமுனையில் மீன்பிடி படகு...

2024-06-23 19:57:32
news-image

நெடுந்தீவு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை...

2024-06-23 19:22:22
news-image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் :...

2024-06-23 19:18:00
news-image

மாணவனைத் தாக்கிய சம்பவத்தில் ஒரே பாடசாலையில்...

2024-06-23 19:38:52
news-image

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்...

2024-06-23 19:19:24
news-image

பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த...

2024-06-23 19:34:03
news-image

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரின்...

2024-06-23 19:13:36
news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46
news-image

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல்...

2024-06-23 18:07:07