யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்த கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது .
ஊர்காவற்துறையில் பிரபல்யமான பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவனத்திற்கு அண்மையாக மதுபான சாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் இந்த பிரதேசத்தில் நடைபெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படுகின்றது.
இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது மதுபான சாலையை நிறுத்த கோரி கையொப்பமும் பெறப்பட்டது
ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் ஊர்காவற்த்துறை சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற மதுபான சாலையை அனுமதியை நிறுத்த கோரி ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று ஊர்காவலத்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் மகஜரையும் கையளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM