11 ஆவது உலக நீர் மன்றத்தை சவூதி நடாத்தத் தீர்மானம் !

28 May, 2024 | 09:49 PM
image

 காலித் ரிஸ்வான்

11 வது உலக நீர் மன்றத்தை 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியா நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக நீர் மன்றத்தின் 10 வது அமர்வின் நிறைவு விழாவின் போது அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள் 160 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

11வது உலக நீர் மன்றம் "ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நடவடிக்கை" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளதோடுஇ உலகளாவிய நீர் சார்ந்த பிரச்சினைகளை அனுகுவதிலும் பிராந்திய மற்றும் சர்வதேச நீர் முன்முயற்சிகளை ஆதரிப்பதிலும் மற்றும் சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்துடன் இணைந்த நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி செயல்படுவதிலும் அந்நாட்டுத் தலைமையின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

அந்நாட்டுச் சுற்றுச்சூழல் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல்-ஃபத்லி இது பற்றி கருத்து தெரிவிக்கையில் சவூதி தலைமையின் குறிப்பிடத்தக்க ஆதரவும் வழிகாட்டல்களும் நீர் துறையில் சவூதியின் தரத்தை சர்வதேச ரீதியாக உயர்த்தியுள்ளது இது குறிப்பிடத்தக்க இந்த உலகளாவிய மன்றத்தை நடத்துவதற்கான வாய்ப்பிற்கு வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய நீர் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச ஆதரவைப் பெறவும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும் ரியாத் நகரில் உள்ள உலக நீர் அமைப்பை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறுவியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடிலெய்டில் வணிக வளாகத்தில் பதற்றம் -...

2024-06-23 13:14:36
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த...

2024-06-23 12:33:26
news-image

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண...

2024-06-23 12:03:55
news-image

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு...

2024-06-23 10:11:14
news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22
news-image

மதநிந்தனை குற்றச்சாட்டில் சுற்றுலாப்பயணி பொதுமக்களால் தாக்கப்பட்டு...

2024-06-21 22:09:05
news-image

வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா...

2024-06-21 15:24:57
news-image

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க முடியாது...

2024-06-21 13:18:28
news-image

இந்திய - இலங்கை சர்வதேச கடல்...

2024-06-21 14:09:55
news-image

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின்...

2024-06-21 10:40:21