சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறும், அனர்த்தம் தணியும் வரை நிவாரண சேவைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 27 ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ சேவை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பலத்த காற்று வீசியதால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேரும் படகு கவிழ்ந்ததில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.
அதற்கமைய உயிரிழந்தவர்களுக்காக அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிலையத்தினால் ரூ.250,000 நட்டஈடு வழங்கப்படவுள்ளதுடன், ரூ.25,000 முன்பணமாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 27 ஆம் திகதி திங்கட்கிழமை வரை 11,326 குடும்பங்களைச் சேர்ந்த 42,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, மக்களின் சுகாதார மற்றும் சுகாதார வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM