நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பம்பரகலை பகுதியில் இன்று காலை (28) வீடொன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் மின் கம்பி அறுந்து விழுந்து வீடு தீப்பற்றியுள்ளது.
இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் உட்பட அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
குறித்த வீட்டில், வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை காற்றின் வேகம் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து வீட்டினுள் தீ பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தீப்பரவலுக்கு மின் ஒழுக்குகே காரணம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த தீயினை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM