செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை விவரிக்கும் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'

Published By: Digital Desk 7

28 May, 2024 | 04:52 PM
image

செல்லப் பிராணிகளுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான பிணைப்பு என்பது விவரிக்க இயலாத உணர்வு பூர்வமானது. இதனை மையப்படுத்தி தயாராகி இருக்கும் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' எனும் திரைப்படம் எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

இயக்குநர் ராம் கந்தசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' எனும் திரைப்படத்தில் கமல் குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரங்கள் பிரணதி சிவசங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், மீனா, வரதராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். குழந்தைகளுக்கான படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கலாலயா நிறுவனம் சார்பில் இயக்குநர் ராம் கந்தசாமி தயாரித்திருக்கிறார். இந்நிலையில் படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வெளியீட்டுக்கு முன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் பங்குபற்றினர்.

படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கந்தசாமி பேசுகையில், '' இப்படத்தின் கதையை முதலில் எம்முடைய மனைவி தான் எம்மிடம் சொன்னார். அவர் தன்னுடைய பால்ய பருவத்தில் ஆடு ஒன்றினை செல்லமாக வளர்த்திருக்கிறார். அப்படி ஆசை ஆசையாய் வளர்த்த ஆட்டை விற்று விட்டார்கள். அதைத் தேடி அவர் பயணிக்க அவரைத் தேடி அவருடைய பெற்றோர்கள் பயணித்த அனுபவத்தை விவரித்தார். இதையே திரைக்கதையாக மாற்றி அமைத்து பிள்ளைகளிடம் விவரித்தேன்.

அவர்கள் அந்த ஆடு அவர்களுக்கு கிடைத்ததா? இல்லையா? என்ற வினாவினை முன் வைத்தனர். குழந்தைகளின் பார்வையும், கோணமும் வித்தியாசமாக இருந்ததால் அவர்களுடைய கோணத்திலேயே இப்படத்தில் திரைக்கதையை மீண்டும் திருத்தி அமைத்தேன்.  இப்படம்  முழுவதும் தயாராகி, சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது பெரும் பாராட்டை பெற்றது. ஒரு உயிரைத் தேடி பயணம் செய்யும் இரு சிறார்களின் கதையாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right