எமது நாடு சிறியதாக இருந்தாலும் பலபடுகொலைகள் இடம்பெற்றுள்ளன - விஜயதாஸ

Published By: Digital Desk 3

28 May, 2024 | 04:12 PM
image

ஜே.வி.பி இரண்டு முறை ஆயுதம் ஏந்தி போராடியதன் விளைவாக 1971 ஆம் ஆண்டில் 12,000 பேரும், 1988-1989 ஆண்டுகளில் 77,000 பேரும் உயிரிழந்ததாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

30 வருடகால விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தில் சுமார் 70 ஆயிரம் உயிரிழந்துள்ளதாகவும், இந்த நாடு சிறியதாக இருந்தாலும் பலபடுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட  நல்லிணக்கக்குழுவிற்கான காரியாலயமொன்றை திறந்துவைக்கும் முகமாக மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில்  நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு அமைச்சர்  தெரிவித்தார். 

இவ்வாறான அனர்த்தங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கக் குழுக்களுக்கு ஆதரவு கிடைக்கும் எனவும் இதன் மூலம் கிராமத்திற்கு கிராம அரச அதிகாரம் கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய  விஜயதாச ராஜபக்ஷ,

இதுவரையில் செயற்பட்டு வந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்த ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் முதல் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சட்டரீதியான அமைப்பாக மாற்றப்பட்டு அதன் செயற்பாடுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த நிறுவனத்தினூடாக கிராமத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிராமம் வலுவூட்டுவதாகவும், 14016 கிராம சேவைபிரிவுகளிலும் 11000 இற்கும் மேற்பட்ட கிராம சேவைபிரிவுகளில்  ஏற்கனவே  நல்லிணக்கக் குழுக்களை நிறுவியுள்ள தாகவும் அவர் கூறினார்.

அண்மைக் காலத்தில் நாடு அரசியல் ரீதியாக  திவாலான நிலைக்கு தள்ளப்பட்டும் மேலும்  நாடடில் ஏற்பட்டுள்ள  வங்குரோத்து நிலையிலும், மறுபுறம் சமூக, பொருளாதார, கலாசார ரீதியிலும் சீரழிந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை விட, இந்த நிலைமை ஏன்? ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து, அது மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே முக்கியமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாம் சுதந்திரம் பெற்ற போது இருந்த தேசிய மற்றும் மத உறவுகளை பாதுகாக்க முடியாமல் போனதும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி கடுமையாக உடைக்கப்பட்டதுமே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

இனம்,மதம் ,குலம் ஆகியவற்றின் அடிப்படையில்  மக்கள் பிரிந்தது ஒருபக்கம் இருக்க, மறுபுறம்   உடரட்ட பகத்தரட்ட  என பிரிவினைகள் வரையறுக்கப்படாவிட்டாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைக் பல பிரிவினர்களாகப் பிரித்து  இந்தப் பிரிவினைகளை தமது பிழைப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனரதாகவும் சுட்டிக்காட்டினார்.

கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கக் குழுவிற்கு கிராமம் தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுவதுடன், கிராமத்தில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் ஐக்கியம் நிலைநாட்டிடப்படுவதுடன்  

கிராமத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களை ஒன்றிணைத்து கிராமத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கி புதிய வேலைத்திட்டத்தின் மூலம் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் தேசிய மட்டத்திற்கு இதனை கொண்டு வர அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும்  வலியுறுத்தினார்.

மேலும் இந்த விசேட சட் ட யாப்பு , நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாகவும், மேலும்  கிராமத்திற்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை இனிமேல் கிராம மக்களே தீர்மானிப்பார்களே தவிர அரசியல்வாதிகளோ அவர்களின் ஆதரவாளர்களோ அல்ல எனவும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, சர்வமத பெரியார்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28