தமிழ் திரையுலகின் சந்தை மதிப்புள்ள முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் 'காதலிக்க நேரமில்லை' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் 'காதலிக்க நேரமில்லை: எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, டிஜே பானு, ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM