எம்முடைய உடலில் இரத்த நாளங்களின் பயன்பாடு என்பது அளப்பரியது. இரத்த நாளங்கள் அல்லது இரத்தக்குழாய்களில் உண்டாகும் பாதிப்பு என்பது அதில் அடைப்பு ஏற்பட்டாலோ பலவீனமடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ அதனை இரத்தக்குழாய் பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். மருத்துவ மொழியில் இதனை வாஸ்குலர் டிஸீஸ் என சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதன் போது இரத்த நாளங்கள் சுருக்கமடைந்து இரத்த ஓட்டத்தை தடை செய்து பாதிப்பை உண்டாக்குகிறது. சிலருக்கு இரத்த உறைவு போக்கு எனும் பாதிப்பு இருந்தாலும் அவர்களுக்கும் இரத்தநாள பாதிப்பு ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதற்குரிய சிகிச்சையை தொடர்ந்தாலும், இரத்தநாள வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து வைத்திய நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில், '' முதுமையின் காரணமாக ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படும். இதனைத் தொடர்ந்து சர்க்கரை நோயினாலும் குறிப்பாக கட்டுப்படுத்தப்படாத நீரழிவு நோயினாலும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலான சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதைத்தொடர்ந்து குருதி அழுத்தம், உயர் குருதி அழுத்தம், அதீத கொழுப்பு, புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இரத்த நாளங்கள் பாதிப்படையும்.
இரத்த நாள பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், வாழ்க்கை நடைமுறையை வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். சத்தான சரி சம விகித உணவு முறையை நாளாந்தம் மேற்கொள்ள வேண்டும். இதனுடன் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றையும் உறுதியுடன் பின்பற்ற வேண்டும். இதனை தொடர்ச்சியாக கடைப்பிடித்தால் இரத்தநாள பாதிப்பை வராமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
வைத்தியர் கார்த்திகேயன்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM