தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் !

Published By: Digital Desk 7

28 May, 2024 | 03:12 PM
image

எம்மில் பலரும் தொழில் செய்து நான்கு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். மேலும் இவர்கள் எந்த தொழிலில் ஈடுபடுகிறார்களோ அந்தத் தொழிலின் அனைத்து சூட்சமங்களையும் அறிந்தவர்களாக இருப்பர். உதாரணத்திற்கு அடுமனை தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலதிபர்கள்- தாங்கள் தயாரிக்கும் நொறுக்கு தீனி, எந்த தருணத்தில் எந்த வகையினதான உணவு பொருள் விற்பனையாகும்? பசியாற வருகை தரும் வாடிக்கையாளர்களின் விருப்ப தெரிவு எதுவாக இருக்கும்? என்பது குறித்த துல்லியமான அவதானம் இருக்கும்.

இதனால் இவர்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, தங்களின் பொருளாதார வளத்தினை மேம்படுத்திக் கொண்டு தொழிலதிபர்களாக வலம் வருவர். ஆனால் விதி வலிதல்லவா...! இவர்களுக்கும் திடீரென்று தொழிலில் நஷ்டம் ஏற்படும். அப்போது அதிலிருந்து எப்படி மீள்வது? என்பது குறித்து சிந்திப்பீர். இது தொடர்பாக ஆன்மீக பெரியோர்களையும், ஜோதிட நிபுணர்களையும் சந்தித்து விளக்கமும், ஆலோசனையும் கேட்பீர். இவர்களுக்கும், இவர்களைப் போன்ற சிறிய அளவிலான தொழிலில் நஷ்டத்தை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில எளிய பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். இதனை தொடர்ச்சியாக கடைப்பிடித்து வரும்போது தொழிலில் வெற்றி பெற்று மீண்டும் தொழிலதிபர்களாக உயர்வர்.

உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம்  இடத்தில் உள்ள அதாவது பத்தாமிடத்தின் அதிபதி கடக ராசியில் இருந்தால் உதாரணமாக நீங்கள் மிதுன லக்னமாக இருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய பத்தாம் இடமான மீன வீட்டின் அதிபதியான குரு உங்களுடைய ராசி கட்டத்தில் கடக ராசியில் இருந்தால் நீங்கள் எம்மாதிரியான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பௌர்ணமி திதி வரும் நாட்களில் உங்களுடைய தாயாரிடம் இருந்து ஒரு வெள்ளியினாலான நாணயத்தை பெற்று, அதனுடன் பச்சரிசியை சேர்த்து, அதனை ஒரு வெள்ளை துணியில் முடிச்சிட்டு, பணம் வைக்கும் பெட்டி அல்லது உங்களுடைய வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் செல்வம் சேர தொடங்கும். தொழில் நல்லவிதமாக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கும்.

இதனை ஒரு முறை செய்தால் போதுமானது. விருப்பம் உள்ளவர்கள் அதாவது அதிக அளவில் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்பவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை இதை செய்தாலும் வளர்ச்சி உறுதி.

இதை விவரிக்கும் போதே வாசிக்கும் வாசகர்கள் பலரும் எம்முடைய தாயார் சிவப்பதவி அடைந்து விட்டார். நாங்கள் என்ன செய்வது? எனக் கேட்பர். அறுபது வயதிற்கு மேற்பட்ட நல்ல உள்ளம் கொண்ட பெண்மணியிடம் ஒரு வெள்ளி நாணயத்தை நீங்களே கொடுத்து அதனை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு அதனை பச்சரிசியிட்டு, வெள்ளை துணியில் முடிச்சிட்டு, உங்களுடைய தொழில் நடத்தும் இடத்தில் வைத்துக் கொண்டாலும் தொழில் நல்லபடியாக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும்.

இதனை இன்னும் நுட்பமாக உடனடி பலன் தரக்கூடிய வகையில் விளக்க வேண்டும் என்றால், பௌர்ணமி திதி வரும் நாட்கள் திங்கட்கிழமையாக இருந்து, அதில் சந்திரனின் ஓரை இருக்கும் தருணத்தில் மேற்கூறிய பரிகாரத்தை செய்தால் பலன் கிடைப்பது உறுதி.

நீங்கள் இறைவனை ஆலயத்திற்கு சென்று தரிசிக்க விரும்பினால் வீட்டில் இருந்து புறப்படும் போதே காலில் காலணி அணியாமல் புறப்பட்டு, ஆலயம் சென்று இறைவனை தரிசித்து விட்டு, மீண்டும் காலணி அணியாமல் தொழில் நடத்தும் இடத்திற்கு சென்றால் தொழிலில் தடையே இல்லாமல் வியாபாரம் நடைபெற்று, பொருளாதார வளம் மேம்படும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

2024-09-09 15:57:29
news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54
news-image

பண வரவு எம்முடைய வீட்டில் நிரந்தரமாக...

2024-08-26 17:26:34
news-image

குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைப்பதற்கான எளிய...

2024-08-24 15:55:33
news-image

வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து விடுபட சித்தர்கள் வழங்கிய...

2024-08-23 20:09:49