உலகின் துணிச்சலான பெண்ணாக ஊடகவியலாளர்  எக்னெலிகொடவின் மனைவி விருது வழங்கி கௌரவிப்பு

Published By: Priyatharshan

30 Mar, 2017 | 12:20 PM
image

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு உலகின் துணிச்சலான பெண் என்ற சர்வதேச விருதை அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் வழங்கி கௌரவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  2017 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

சந்தியா எக்னெலிகொடவைப் போன்று உலக அளவில் மேலும் 13 பெண்களுக்கு இவ்வாறு விருது வழங்கி கௌவிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.

தனது கணவனுக்காக மட்டுமன்றி காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாகவும் போராடியவர் என்பதற்காக இவர் இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட நிலையிலேயே இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகம் மேலும் தெரிவித்துள்ளதுடன்  நீதி, நல்லிணக்கத்திற்கான ஒரு ஆழமான  சின்னமாக விளங்குவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட,  மஹிந்த ராஜபக்ஷவின்  ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40