ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனை - வெளியிட்டது ஐக்கியதேசிய கட்சி

28 May, 2024 | 03:22 PM
image

ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனையை, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார முன்வைத்துள்ளார்.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், தேவைப்பட்டால் இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம் என தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு தருணம் என தெரிவித்துள்ள அவர், நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது, ஆனால் அதற்கு தீர்வை காண்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் நம்பிக்கையை நாங்கள் மீளப் பெற்றுள்ளோம். பொருளாதாரநிலையை ஸ்திரப்படுத்தியுள்ளோம்.  பொதுமக்களிற்கு நிவாரணங்களை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த விடயங்களை சாதித்துள்ளோம், எனவும் தெரிவித்துள்ள அவர் நாட்டின் தற்போதைய தேவைகள் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலுடன் தொடர்புபட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53
news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57