ஊடகத்துறை சார்ந்த மற்றும் ஆர்வம்மிக்க நண்பர்களின் சந்திப்புக்களின் வழியே தோற்றம் பெற்ற “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அமைப்பானது ஞாயிற்றுக்கிழமை (26) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வானது, அன்றையதினம் மாலை 4 மணிக்கு சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் மயூரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, சுவிற்சர்லாந்தின் சோஷலிச ஜனநாயக கட்சியின் சொலத்தூன் மாநில Hofstellen - Flüh பகுதியின் கலை, கலாச்சாரப்பிரிவின் உறுப்பினர் சுலோஜன் சுந்தரலிங்கத்தினால் விழாச் சுடர் ஏற்றி வைப்போடு நிகழ்வுகள் ஆரம்பமாக்கப்பட்டது.
இது வரை காலமும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படத்துக்கான ஈகைச்சுடரினை சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்விச்சேவை மற்றும் Tess Care மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் வினுசன் ஜெயரட்ணராசா ஏற்றி வைக்க ஊடகச் செயற்பாட்டாளர் கரன் மலர் வணக்கம் செலுத்தியதோடு, தொடர்ந்து அகவணக்கமும் வருகை தந்தோரின் மலர் வணக்கமும் இடம்பெற்றது.
தலைமையுரையினை சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் தலைவர் ஊடகவியலாளர் ஜெராட் நிகழ்த்தியதோடு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய நினைவுப் பேருரையினை சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் உபதலைவர் ஊடகவியலாளர் அசோக் நிகழ்த்தினார்.
வாழ்த்துரையினை நிகழ்த்திய பாசல் இந்து ஆலயத்தின் தலைவரும், பிறாத்தல்ன் நகரசபை உறுப்பினருமான குலசிங்கம் விக்னராஜாவினால் ஊடகம் மற்றும் அரசியல் துறையில் இளைய தலைமுறையினர் தடம்பதிக்க வேண்டும் என்பதனையும் அதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தார்.
சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து சுவிற்சர்லாந்தின் சோஷலிச ஜனநாயக்கட்சியின் உறுப்பினராகி அரசியலில் தடம் பதிக்கும் சுலோஜன் சுந்தரலிங்கம் ஊடகத்துறையின் அவசியம் பற்றியும் ஊடகசுதந்திரம் பற்றியும் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இறுதியுத்தம் வரை முள்ளிவாய்காலில் இருந்து மீண்டு வந்த ஊடகவியலாளர் அமரதாஸ் சிறப்புரை ஆற்றியதோடு, சுவிஸ் ஊடக மையம் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” திட்டமிட்டபடி மூத்த ஊடகவியலாளர்களுக்கான மதிப்பளிப்பினை பெறுவதற்கு இந்த ஆண்டு மூத்த ஊடகவியலாளராக ஞானசுந்தரம் குகநாதன் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் உடல் நலக்குறைவால் சமூகமளிக்க முடியாது போயிருந்தமையினால். அவருக்கான மதிப்பளிப்பினை ஊடகவியலாளர் அமரதாஸ் வழங்க ஊடகவியலாளர் அசோக் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து “சுவிஸ் ஊடக மையம்” அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
தலைவராக ஜெராட், உபதலைவராக அசோக், செயலாளராக மதனராஜ், உபசெயலாளர் வின்ஸ்லோ, பொருளாளராக மயூரன், ஆலோசகராக ஊடகவியலாளர் கனகரவி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அறிமுகத்தினைத் தொடர்ந்து அறிமுக உரையினை நிகழ்த்திய ஊடகவியலாளர் கனகரவியினால் ஊடகத்துறையின் சவால்கள் பற்றியும் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் முன் விரிந்துள்ள பணிகள் பற்றியும் வலியறுத்தியுள்ளார்
சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் செயலாளர் மதன்ராஜ்ஜின் நன்றியுரையுடன் அரங்க நிகழ்வு மாலை 5.30 மணிக்கு நிறைவு கண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM