ரபாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தற்போது மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தவேண்டும் அதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல்கள் பயங்கரமான ஏற்றுக்கொள்ள முடியாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள பெனிவொங் காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ள ரபாவின் மீது இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை முன்னெடுக்க கூடாது என்பது குறித்து அவுஸ்திரேலியா தெளிவாக உள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் பொதுமக்களை மனித கேடயங்களா பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் தனது ஆயுதங்களை கைவிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM