சிலாபம் பகுதியில் காதல் தோல்வியால் காதலிக்கு கொடுத்த பெறுமதியான பரிசு பொருள் ஒன்றை திரும்பப்பெறச் சென்ற  17 வயது சிறுவன் மீது மாணவியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

குறித்த சிறுவன் தனக்கு தொல்லைக் கொடுப்பதாக மாணவி உறவினர்களிடம் தெரிவித்ததனையடுத்து கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.