பிரிட்டனால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் உயிரிழப்பு - பிரிட்டனின் உள்துறை அலுவலகம் மீது கடும் குற்றச்சாட்டுகள்

Published By: Rajeeban

28 May, 2024 | 10:18 AM
image

பிரிட்டனின் உள்துறை அமைச்சினால் இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தனது மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்;டியுள்ளனர்.

சுதர்சன் இதயசந்திரன் என்பவர் 2019 டிசம்பர் மாதம் 24ம் திகதிஅவரது திருமணநாள் அன்று பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

போலியான ஆவணங்களை பயன்படுத்தியதையும் டெஸ்கோவில் பணியாற்றியமையையும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டார்.

செவிப்புல திறன் அற்ற தனது மனைவி சுபத்திரா தனது 9 மற்றும் 8 வயது ஆண் பெண் குழந்தைகளை விட்டு விட்டு அவர் பிரிட்டனிலிருந்து வெளியே வேண்டிய நிலையேற்பட்டது.

அவரின் மனைவியின் தாயார் சுதர்சன் இதயசந்திரனை  குடும்பத்தின் தூண் என வர்ணித்துள்ளார்.

எனினும் நவம்பர் 2023 ம் ஆண்டு இடம்பெற்ற குடிவரவுதீர்ப்பாயத்தில் நீதிபதி பொனெவெரோ  சுதர்சன் இதயசந்திரனின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டதுடன் அவருக்கு குடும்பத்துடன் இணைவதற்கான உரிமை உள்ளது என தெரிவித்தார்.

சுதர்சன் இதயசந்திரனிற்கு  பிரிட்டனில் அவரது குடும்பத்தினருடன் வாழ்வதற்கான உரிமையுள்ளது என நீதிபதிதெரிவித்தார்.

இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் முறையீடு செய்யவி;ல்லை எனினும் அவர் மீண்டும் பிரிட்டனிற்கு திரும்புவதற்கான விசாவை வழங்கும் ஏற்பாடுகளை மந்தகதியில் முன்னெடுத்தது. இந்த செயற்பாடுகள் பல மாதங்கள் நீடித்தன.

இதன் காரணமாக அவர் இலங்கையில் ஆபத்தான சூழ்நிலைகளில் வசிக்கவேண்டிய நிலைக்குதள்ளப்பட்டார்.

அவரது குடும்பம்  இலங்கை தமிழ் குடும்பம்.

எம்டிசி சொலிசிட்டர்சனின் நாக கந்தையா உள்துறை அமைச்சின் தாமதங்கள் குறித்த நீதிமறுஆய்வினை முன்னெடுத்ததை தொடர்ந்தே அதிகாரிகள் சுதர்சன் இதயசந்திரனிற்கு மீண்டும் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

அதற்காக மன்;னிப்பு கடிதமொன்றையும் வெளியிட்டனர்.அந்த கடிதத்தில் தாமதங்களிற்கு அதிகாரிகள் காரணமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 19 ம் திகதி இலங்கையில் இதயசந்திரன் அவர் தங்கயிருந்த இடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

செப்சிஸ் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்து இருந்ததால் அவர் மனஉளைச்சலிற்கு ஆளாகியிருந்தார் என தெரிவித்துள்ள அவரது அவர் ஒழுங்காக உணவருந்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அவரது குடும்பத்தினர் இதிலிருந்து எவ்வாறு மீளப்போகின்றனர் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள நாகேந்திரா அவர் இங்கு வசித்தவேளை அவைரையும் பராமரித்தார் அவர் மிகவும் இளகிய மனம் கொண்ட ஆதரவான நபர் அவரது இழப்பை யாராலும் மீளநிரப்ப முடியாது உள்துறை அமைச்சு அவரை நாடு கடத்தாவிட்டால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என கருதுகின்றேன் அவரின் மரணத்திற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சே காரணம் என குற்றம்சாட்டுகின்றோம்  என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனின் உள்துறை அமைச்சு இதயசந்திரனை மிகவும் நியாயமற்ற விதத்தில் நடத்தியுள்ளது என தெரிவித்துள்ள நாகேந்திரா அவருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும்அவர் மனமுடைந்தவராக காணப்பட்டார்  தனது குடும்பத்துடன் மீள இணைவதற்காக தான் ஏன் காத்திருக்கவேண்டும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் நாகேந்திரா தெரிவித்துள்ளார்.

என்ற அமைப்பின் இயக்குநர் லூ கால்வே இந்த மனதிற்கு கடும் வேதனையை ஏற்படுத்தும் விவகாரம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்பவேண்டும்,பிரிட்டனில் வசிப்பதற்கான தெளிவான உரிமை உள்ளபோது ஏன்சுதர்சன் நாடு கடத்தப்பட்டார் ?நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஏன் உள்துறை அமைச்சு மந்தகதியில் செயற்பட்டது  என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன்...

2024-06-17 17:59:41
news-image

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2024-06-17 17:59:10
news-image

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த...

2024-06-17 17:28:31
news-image

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை...

2024-06-17 17:23:48
news-image

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு...

2024-06-17 17:23:24
news-image

நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள்...

2024-06-17 16:36:53
news-image

75 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில்...

2024-06-17 16:44:36
news-image

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில்...

2024-06-17 17:19:50
news-image

மாத்தளையில் நாளை நீர் வெட்டு

2024-06-17 15:49:35
news-image

களுத்துறையில் இளைஞர் கடத்தல் ; பொலிஸார்...

2024-06-17 15:25:46
news-image

சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி...

2024-06-17 15:42:54
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களுடைய பூர்வீக காணிகள்...

2024-06-17 14:46:36