முல்லைத்தீவு, தியோநகர் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறைவு

Published By: Digital Desk 7

28 May, 2024 | 09:33 AM
image

முல்லைத்தீவு, தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும்  இணைப்பு வீதியானது சில தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்ட சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.

முல்லைத்தீவு கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் குறித்த வீதியூடாகவே கிராம மக்கள்  மீன்பிடிக்குச்செல்வது வழக்கமானதாகும்.

இந்நிலையில் திங்கட்கிழமை (27) மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் வீதியினது வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதனையடுத்து   மக்கள் கிராம மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள் வேலிகளை அகற்றியிருந்தனர்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள  தனியார் நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக  அப்பகுதி மீனவர்களுக்கு தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுத்து வருவதாகவும், குறித்த கிராம மக்களின் மீன்பிடிப்படகுகள் வலைகளை உள்ளே வைத்தே பாதையினை அடைத்ததாகவும் கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரமாக விடுவதில்லை என்றும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை என்றும்  தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை  தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று பிரதேச செயலக அதிகாரிகளும், பிரதேச சபை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதன் அடிப்படையில் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் இன்றுடன் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் தீர்வு கிடைக்காவிட்டால் இரு வாரங்களின் பின்னர் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்கள்  நேரில் சென்று மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் மக்களுடன் இணைந்து தீர்வினை கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 09:59:59
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11