துருக்கியில் வாகனங்கள் மீது பஸ் மோதி விபத்து ; 10 பேர் பலி ; 39 பேர் காயம்

Published By: Digital Desk 3

28 May, 2024 | 09:23 AM
image

தெற்கு துருக்கியில் அதிவேக வீதியில் பயணிகள் பஸ் ஒன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (26)  மெர்சின் மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு நகரமான தியார்பாகிரில் இருந்து தெற்கில் உள்ள அதானாவுக்கு 28 பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது பஸ் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. அதனை தொடர்ந்து  லொறி ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் குறைந்தது எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு நகரமான தியார்பாகிரில் இருந்து நாட்டின் தெற்கில் உள்ள அதானாவுக்குப் பயணித்த இன்டர்சிட்டி பேருந்தில் 28 பயணிகள் இருந்ததாக அனடோலு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03