இன்றைய வானிலை 

28 May, 2024 | 07:07 AM
image

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையும் மேலும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  நுவரேலியா மாவட்டத்தின்  சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஊவா மாகாணத்தின்  பல இடங்களிலும் அத்துடன் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும்  தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மொனராகலை  மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும்.

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆகையினால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

 

புத்தளம்  தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். 

கல்பிட்டி தொடக்கம்  கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41