பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை ஐக்கிய அமெரிக்காவுக்கு இருந்தது - பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ

Published By: Vishnu

27 May, 2024 | 07:58 PM
image

(நெவில் அன்தனி)

டெக்சாஸில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்iகை பங்களாதேஷைவிட அமெரிக்க அணிக்கு  இருந்ததாக அணியின் தலைமைப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக ஐசிசி முழு உறுப்பு நாடொன்றின் அணிக்கு எதிராக இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷை வெற்றிகொண்டு தொடரை கைப்பற்றியது.

முதல் இரண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா முறையே 5 விக்கெட்களாலும் 6 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது.

எனினும் கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அபாரமாக விளையாடி 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

எனினும் தொடரை 2 - 1 ஆட்டக் கணக்கில் ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக்கொண்டது.

கடைசிப் போட்டிக்குப் பின்னர் கருத்து வெளியிட்டு ஸ்டுவர்ட் லோ, 'முதல் இரண்டு போட்டிகளில் எங்களுக்கு அதிக வைராக்கியமும் ஆர்வமும் இருந்தது. எதிரணியை விட நாங்கள் சற்று அதிகமாக திறமையை வெளிப்படுத்த விரும்பினோம். ஆனால், கடைசிப்  போட்டி   எங்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. நாங்கள் ஆசுவாசமாக விளையாடினோம் போலும். பங்களாதேஷ்  திறமையாக விளையாடியதுடன் இந்த உற்சாகத்துடன் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்ளும்' என்றார்.

'பங்களாதேஷுடனான இந்தத் தொடர் எமது அணியை உலகக் கிண்ணத்திற்கு தயார்படுத்த பெரிதும் உதவியது. வெறுமனே வலைகளில் பயிற்சி பெறுவதைவிட இவ்வாறான போட்டிகளில் விளையாடுவது மிகவும் நல்லது. ஒற்றைப் போட்டிகளில் எதுவும் நிகழலாம். அப்படித்தான் உலகக் கிண்ணப் போட்டியும் அமையும். யாரும் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக போட்டியில் பங்குபற்ற முடியாது' என அவர் மேலும் குறி;ப்பிட்டார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் அதி சிறந்த வீரர்களுடன் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, கடைசிப் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது.

அணித் தலைவர் மொனாங்க் படேல், ஆரம்ப வீரர் ஸ்டீவன் டெய்லர், சகலதுறை வீரர் ஹர்மீத் சிங், வேகப்பந்து வீச்சாளர் அலி கான் ஆகிய பிரதான வீரர்களுக்கு ஓய்வு அளித்ததன் மூலம் மற்றைய வீரர்களின் திறமையை அமெரிக்கா பரீட்சித்துப் பார்த்தது.

ஆனால், கடைசிப் போட்டியில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் மிகத் திறமையாக பந்துவீசி 6 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பங்களாதேஷுக்கு உற்சாகம் கொடுக்கும் வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

எவ்வாறாயினும் பங்களாதேஷை எந்த வகையிலும் ஸ்டுவர்ட் லோ குறைத்து மதிப்பிடவில்லை.

மாறாக, உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் மீண்டுவரக்கூடிய அணி என அவர் கூறினார்.

இதேவேளை, மத்திய வரிசையில் ஏற்பட்ட சரிவே மூன்றாவது போட்டியில் பங்களாதேஷிடம் அமெரிக்கா தோல்வி அடைய காரணம் என மொனாங்க் பட்டேலுக்கு பதிலாக அமெரிக்க அணித் தலைவராக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்தார்.

'எமது அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், ஆரம்ப வீரர்கள் ஆட்டம் இழந்ததும் எல்லாம் எமக்கு பாதகமாக அமைந்துவிட்டது' என்றார் ஆரோன் ஜோன்ஸ்.

'எமது அணி சிறந்ததாகும். அதனை உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான பங்களாதேஷுக்கு எதிராக வெளிப்படுத்தினோம். பாகிஸ்தானையோ அல்லது இந்தியாவையோ நாங்கள் வெற்றிகொண்டால் அதனை தலைகீழ் முடிவு என நான் கூறமாட்டேன். குறிப்பிட்ட நாளில் நாங்கள் திறமையாக விளையாடினோம் என்றே கூறுவேன். இது கிரிக்கெட்டில் நிகழக்கூடியது. ஏனெனில் பெரிய அணிகளும் தோல்வி அடையலாம்' என அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி: பெண்களுக்கான...

2024-06-17 15:09:39
news-image

நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர்...

2024-06-17 12:17:46
news-image

நெதர்லாந்துடனான போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையை...

2024-06-17 11:23:06
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா; சுப்பர் 8...

2024-06-16 14:49:20
news-image

ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல்...

2024-06-16 09:48:26
news-image

இரண்டு கோடி ரூபா செலவில் சிட்டி...

2024-06-16 09:50:23
news-image

முதல் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை...

2024-06-15 21:16:15
news-image

நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை;...

2024-06-15 16:23:37
news-image

சமரி அத்தபத்தவுக்கு மீண்டும் ஐசிசி விருது...

2024-06-15 10:36:16
news-image

அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால்...

2024-06-15 06:57:40
news-image

ஆப்கானிஸ்தன் உள்ளே ! நியூஸிலாந்து வெளியே...

2024-06-14 13:52:46
news-image

பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப்...

2024-06-14 01:42:11