ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி: அவுஸ்திரேலிய அணியில் வீரர்களுக்கு பற்றாக்குறை

Published By: Vishnu

27 May, 2024 | 06:36 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியில் வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இண்டியன் பிறீமியர் லீக்கின் கடைசிக் கட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சில நாட்களை சொந்த நாட்டில் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நமிபியாவுடன் 28ஆம் திகதியும் மேற்கிந்தியத் தீவுகளுடன் 30ஆம் திகதியும் பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா விளையாடவுள்ளது.

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடியபோது உபாதைக்குள்ளான அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஈடுபட தெரியாதவராக இருக்கிறார். அவர் பூரண குணமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே பயிற்சிப் போட்டிகளில் அவர் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடவுள்ளார்.

இதேவேளை, இண்டியன் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக விளையாடிய அணித் தலைவர் பெட் கமின்ஸ், ட்ரவிஸ் ஹெட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பாக விளையாடிய மிச்செல் ஸ்டார்க், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு சார்பாக நீக்கல் போட்டியில் விளையாடிய க்ளென் மெக்ஸ்வெல், கெமரன் க்றீன் ஆகியோர் சொந்த நாட்டில் சில தினங்களைக் கழிக்கச் சென்றுள்ளனர்.

மார்க்கஸ் ஸ்டொய்னிஸும் இன்னும் அவுஸ்திரேலியாவிலிருந்து கரிபியன் தீவுகளுக்கு செல்லவில்லை.

இவர்கள் ஆறு பேரும் ஓமானுக்கு எதிராக பார்படோசில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக கரிபியன் தீவுகளை சென்றடையவுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத டேவிட் வோர்னர் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றுவருகிறார்.

இந்த உலகக் கிண்ணம் அவரது பிரியாவிடை உலகக் கிண்ணமாக அமையவுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் மற்றொரு உதவிப் பயிற்றுநரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமைப் பயிற்றுநருமான டெனியல் வெட்டோரியும் இன்னும் அவுஸ்திரேலிய அணியுடன் இணையவில்லை.

அடம் ஸம்ப்பா, ஜொஷ் இங்லிஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ஏஷ்டன் அகார், மெத்யூ வேட், நேதன் எலிஸ் ஆகியோர் அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெறும் மற்றைய வீரர்களாவர்.

இந்த வீரர்களுடன் பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலிய பயிற்சிக் குழாத்திலுள்ள தலைமைப் பயிற்றுநர் அண்ட்றூ மெக்டொனல்ட், ப்றட் ஹொஜ், தேசிய தெரிவாளர் ஜோர்ஜ் பெய்லி, உதவிப் பயற்றுநர் அண்ட்றூ போரோவெக் ஆகியோர் விளையாட அழைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி: பெண்களுக்கான...

2024-06-17 15:09:39
news-image

நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர்...

2024-06-17 12:17:46
news-image

நெதர்லாந்துடனான போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையை...

2024-06-17 11:23:06
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா; சுப்பர் 8...

2024-06-16 14:49:20
news-image

ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல்...

2024-06-16 09:48:26
news-image

இரண்டு கோடி ரூபா செலவில் சிட்டி...

2024-06-16 09:50:23
news-image

முதல் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை...

2024-06-15 21:16:15
news-image

நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை;...

2024-06-15 16:23:37
news-image

சமரி அத்தபத்தவுக்கு மீண்டும் ஐசிசி விருது...

2024-06-15 10:36:16
news-image

அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால்...

2024-06-15 06:57:40
news-image

ஆப்கானிஸ்தன் உள்ளே ! நியூஸிலாந்து வெளியே...

2024-06-14 13:52:46
news-image

பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப்...

2024-06-14 01:42:11