உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல் ...!

Published By: Digital Desk 7

28 May, 2024 | 06:02 AM
image

தனுஷ் நடிப்பில் தயாராகி அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் 'ராயன்' திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலில் இளம் பெண்ணின் முகத்தை 'வாட்டர் பாக்கெட் மூஞ்சி' என்று உருவ கேலி செய்யப்பட்டிருப்பதால். ஒரு பிரிவு ரசிகர்கள் இப்பாடலுக்கு இசையமைத்த 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மானுக்கு தங்களது கண்டனத்தை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராயன்' எனும் திரைப்படத்தில் தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் வித் திரில்லர் வகையிலான இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'வாட்டர் பாக்கெட்' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

'நீ இருக்குறியே ஓல கொட்டாயா...' எனத் தொடங்கும் அந்தப் பாடலை பாடலாசிரியர் கானா காதர் எழுத இசையமைப்பாளரும், பாடகருமான சந்தோஷ் நாராயணன்- பின்னணி பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியிருக்கிறார்.  இந்தப் பாடல் வெளியாகி பரவலான ஆதரவை பெற்று வந்தாலும், ஒரு பிரிவு ரசிகர்களிடத்தில் இளம் பெண்ணை அதிலும் சற்று குண்டான இளம் பெண்ணை 'வாட்டர் பாக்கெட் மூஞ்சி' என உருவ கேலி செய்திருப்பது பிடிக்காததால்.. அது தொடர்பான தங்களது கண்டனத்தை விமர்சனங்களாக இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right