கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

Published By: Digital Desk 7

28 May, 2024 | 06:02 AM
image

தமிழ் திரையுலகில் அழகான புன்சிரிப்பை தன் அடையாளங்களில் ஒன்றாக கொண்டிருக்கும் நட்சத்திர கலைஞர்களான கார்த்தி- அரவிந்த்சாமி முதன் முதன்முறையாக இணைந்திருக்கும் 'மெய்யழகன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

'96' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மெய்யழகன்' எனும் திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா- ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் கார்த்தியும் அரவிந்த்சாமியும் மண்ணின் மைந்தர்களாக துவி சக்கர வண்டியில் பயணிப்பது போல் வடிவமைத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பிரத்யேகமாக வெளியிடப்பட்ட மற்றொரு போஸ்டரில் கார்த்தி ஜல்லிக்கட்டு காளையுடன் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right