விக்கன் வேதம் பற்றி பேசும் 'தி அக்காலி'

Published By: Digital Desk 7

28 May, 2024 | 06:07 AM
image

தமிழ் திரையுலகில் சாத்தான்களை பற்றி பேசும் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள வேதங்களைப் பற்றியும் சில திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் விக்கன் வேதம் எனும் வழக்கில் இல்லாத அரிய வேதத்தை பற்றிய விடயங்களை விவரிக்கும் வகையில் 'தி அக்காலி' எனும் திரைப்படம் தயாராகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் முஹம்மத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி அக்காலி' எனும் திரைப்படத்தில் நாசர்,  ஸ்வயம் சித்தா,  வினோத் கிஷன், அர்ஜய், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோதினி, யாமினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனீஸ் மோகன் இசையமைத்திருக்கிறார்.

பில்லி, சூனியம் போன்ற சாத்தான்கள் பற்றி பேசும் இந்தத் திரைப்படத்தை பி பி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி யூகேஸ்வரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டத்தை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் விக்கன் வேதம் குறித்த விடயங்கள் இடம் பிடித்திருப்பதாலும், நாசரின் பின்னணி குரலில் இவை விவரிக்கப்படுவதாலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறன் - விமல் - போஸ்...

2024-06-20 17:03:37
news-image

மலையாள ரசிகர்களையும் கவர்ந்த 'மகாராஜா'

2024-06-20 16:44:29
news-image

நடிகர் நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்'...

2024-06-20 16:35:10
news-image

பிரபுதேவா நடிக்கும் 'மூன் வாக்' பட...

2024-06-19 20:12:40
news-image

அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து

2024-06-19 20:18:52
news-image

நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின்...

2024-06-18 17:16:20
news-image

நடிகை ஹனி ரோஸ் கவர்ச்சியில் கலக்கும்...

2024-06-18 17:21:15
news-image

சொல்லி அடிக்கும் பிரபாஸ் - தில்ஜித்...

2024-06-18 17:22:48
news-image

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது 'புஷ்பா...

2024-06-18 15:04:32
news-image

புதுமுக நடிகர் விஷ்வந்த் நடிக்கும் 'ராக்கெட்...

2024-06-18 14:46:04
news-image

ஜீ - 5 தளத்தில் வெளியாகி...

2024-06-17 17:30:35
news-image

'பீனிக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகும் நட்சத்திர...

2024-06-17 16:43:04