'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு நடிக்கும் 'ஜோரா கைய தட்டுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published By: L. Abhilashani

28 May, 2024 | 06:08 AM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜோரா கைய தட்டுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் வினீஷ் மில்லேனியம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜோரா கையத்தட்டுங்க'  எனும் திரைப்படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். என். அருணகிரி இசையமைத்திருக்கிறார்.‌

மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாமா என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜாஹிர் அலி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் யோகி பாபு மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞர் தோற்றத்தில் தோன்றுவதும், அவருடன் செல்ல பிராணிகள் உடன் இருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூர்யா - ஜோதிகாவின் 20 ஆண்டுகால...

2026-09-16 15:31:09
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-16 14:01:19
news-image

விமல் நடிக்கும் 'சண்டக்காரி' படத்தின் முன்னோட்டம்...

2026-09-16 13:47:29
news-image

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் 'ஃபீல்...

2026-09-16 13:50:23
news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05