இந்தியாவில் மே 25ஆம் திகதியன்று நடைபெற்ற ஆறாம் கட்ட இந்திய மக்களவைத் தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பதினெட்டாவது இந்திய மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. மே 25ஆம் திகதியன்று புது தில்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
மேலும், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும், புதிதாக யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் என மொத்தம் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்காளத்தில் மிக அதிகபட்சமாக 80 சதவீத வாக்கு பதிவானதாகவும், உத்தர பிரதேசத்தில் 54 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தநாக் ரஜோரி என புதிதாக வரையறை செய்யப்பட்ட மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 54.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
1984க்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் இதுதான் அதிக வாக்கு சதவீதம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கான ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் மாதம் முதல் திகதியன்று நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
இதனிடையே ஆறாம் கட்ட தேர்தலில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் சந்திர சூட் ஆகியோரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM