(இராஜதுரை ஹஷான்)
மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அரச நிறுவனங்கள் மற்றும் அரச வளங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் ஆணை ஜனாதிபதிக்கும்,அரசாங்கத்துக்கும் கிடையாது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத்தேர்தலா ? முதலில் இடம்பெறும் என மக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையிலும் மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை.சொல்வதை செய்யும் கலாச்சாரம் இல்லாத காரணத்தால் அரச நிறுவனங்கள் மீது மக்கள் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள்.
புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகிறது.தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அவசர அவசரமாக சட்டங்களை இயற்றி கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 'பொருளாதார நிலைமாற்றம்'சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களாணை இல்லாத இந்த அரசாங்கம் எதிர்கால அரசாங்கங்களும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.ஆட்சியில் உள்ள அரசாங்கம் எதிர்கால அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் சட்டங்களை இயற்ற முடியாது.இந்த சட்டமூலத்தில் அவ்வாறான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தியுள்ளது.எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நட்டமடையும்ப்பதற்கு அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு பதிலாக இலாபமடையும் நிறுவனங்களான ஸ்ரீ லங்கா டெலிகொம்,ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகியவற்றையும் தனியார் மயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களையும்,அரச வளங்களையும் தனியார் மயப்படுத்த ஜனாதிபதிக்கும்,அரசாங்கத்துக்கும் மக்களாணை கிடையாது.ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து மக்களிடம் ஆணை கோர வேண்டும்.இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் அவதானத்துடன் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM