ரெமல் புயல் ; பங்களாதேஷ், இந்தியாவில் பலத்த மழையினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு

Published By: Digital Desk 3

27 May, 2024 | 04:27 PM
image

ரெமல் புயல் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கரையைக் கடந்ததை அடுத்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது.

இதன் காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்பட்டுள்ளது.

புயல் தாக்கத்திற்கு முன் ஆயத்தமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

ரெமல் புயல் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் புயல் சீறியதாக இந்தியாவின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோல்கத்தா நகரில் புயலின் வேகம் உச்சத்தில் இருந்தபோது பெரிய கொங்கிரிட் துண்டுகள் விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

ரெமல் புயல் 89 மில்லி மீற்றர் (3.5 அங்குலம்) மழையை பொழியும் மற்றும் வங்காள விரிகுடாவின் கடல் அலையானது 2.5 முதல் 3.7 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷில் புயல் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிக்கு 120 கிலோ மீட்டர்வேகத்தில் காற்று வீசியதால், மரங்களும் மின் கம்பங்களும் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பங்களாதேஷில் உள்ள மோங்லா மற்றும் பேரா கடல்சார் துறைமுகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

இவர்களில் குறைந்தது அரை இலட்சம் மக்கள் "களிமண், மரம், பிளாஸ்டிக், வைக்கோல் அல்லது தகரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட வீடுகளில் வாழ்கின்றனர் என  இலாப நோக்கற்ற BRAC அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் பருவழைக் காலத்தில் உருவான முதல் புயலாக ரமெல் உள்ளது. புயலுக்கு ஓமன் நாடு 'ரமெல்' என பெயரிட்டுள்ளது. இதற்கு அராபிய மொழியில் மண் என்று அர்த்தமாகும். ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் வரை நீடிப்பது வழக்கம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடிலெய்டில் வணிக வளாகத்தில் பதற்றம் -...

2024-06-23 13:14:36
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த...

2024-06-23 12:33:26
news-image

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண...

2024-06-23 12:03:55
news-image

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு...

2024-06-23 10:11:14
news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22
news-image

மதநிந்தனை குற்றச்சாட்டில் சுற்றுலாப்பயணி பொதுமக்களால் தாக்கப்பட்டு...

2024-06-21 22:09:05
news-image

வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா...

2024-06-21 15:24:57
news-image

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க முடியாது...

2024-06-21 13:18:28
news-image

இந்திய - இலங்கை சர்வதேச கடல்...

2024-06-21 14:09:55
news-image

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின்...

2024-06-21 10:40:21