(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் இடம்பெறக்கூடிய எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு இலங்கையில் மிகவும் விசாலமான கூட்டணியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அமைக்க இருக்கிறோம். அதன் அங்குரார்பண நிகழ்வு அடுத்த மாதம் அம்பாந்தோட்டையில் இடம்பெறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாட்டில் அடுத்து இடம்பெறும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்க இருக்கும் நிலைப்பாடு தொடர்பாக குறிப்பிடுகையிலலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டில் இடம்பெறக்கூடிய எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு இலங்கையில் மிகவும் விசாலமான மற்றும் பலம்மிக்க கூட்டணியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அமைக்க இருக்கிறோம். அதன் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற இருக்கிறது. அன்றைய தினம் பாரிய மக்கள் கூட்டத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியின் கன்னி பேரணி இடம்பெற இருக்கிறது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துப்படுத்தாத கட்சிகள் என பல கட்சிகள். எமது பாரிய கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றன. அதேநேரம் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த பேரணியில் கலந்துகொள்வதாக தற்போதே எமக்கு அறிவித்திருக்கிறார்கள்.
அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி கட்சியை இல்லாமலாக்க சிலர் செயற்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரம் தற்போது எமது தரப்பினர் வசமே இருக்கிறது. கட்சியின் தலைமையகம் கட்சி ஆதரவாளர்கள் அனைவருக்கும் திறந்திருக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM