நாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் பல ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அத்தனகலு ஓயா, களனி, களு, ஜின் மற்றும் நில்வளா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட ஆறுகளின் நீர் மட்டம் 'எச்சரிக்கை மட்டத்தில்' உள்ளதால், இந்த ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்பாசன பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்திலுள்ள தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இன்று திங்கட்கிழமை (27) காலை திறக்கப்பட்டு வினாடிக்கு சுமார் 7,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
குகுலே நீர்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 80 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் குடா கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM