எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை பாதுகாப்பானதா..?

Published By: Digital Desk 7

27 May, 2024 | 04:02 PM
image

எம்முடைய உடலில் ஆரோக்கியமான ரத்த அணுக்களை உற்பத்தி செய்வது எலும்பு மச்சைகள். பல்வேறு காரணங்களால் எலும்பு மச்சைகள் ஆரோக்கியமான ரத்த அணுக்களை  உற்பத்தி செய்யாத நிலை ஏற்பட்டால் அப்போது வைத்திய நிபுணர்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர். 

எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை என்பது எம்முடைய உடலுக்கு தேவையான ஆரோக்கியமான ரத்த அணுக்களை உற்பத்தி செய்யாத எலும்பு மச்சையை மாற்றி, ஆரோக்கியமான ரத்தத்தை உருவாக்கும் ஸ்டெம் செல்களை உங்களின் உங்களுடைய உடலில் செலுத்தும் ஒரு செயல் முறையாகும். எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சையை ஸ்டெம் செல் மாற்று சத்திர சிகிச்சை என்றும் குறிப்பிடுவதுண்டு.

உங்களுடைய எலும்பு மஜ்ஜை தன்னுடைய பணியை நிறுத்திக் கொண்டு, போதுமான அளவிற்கு சக்தி நிறைந்த ரத்த அணுக்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் உங்களுக்கு இந்த சத்திர சிகிச்சை அவசியப்படலாம்.

எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் நோயாளிகளிடம் பரிந்துரைக்கும் போது, நோயாளிகளிடமும், நோயாளிகளின் உறவினர்களிடமும் உடனடியாக பதற்றமும், அச்சமும் ஏற்படும். இதற்கு வைத்திய நிபுணர்கள் இந்த செயல்முறை குறித்த விளக்கத்தை அளிக்கிறார்கள்.

முதலில் ஆரோக்கியமான ரத்த அணுக்களை உற்பத்தி செய்யாத எலும்பு மஜ்ஜையை கீமோதெரபி அல்லது ரேடியோ தெரபி எனும் சிகிச்சையை வழங்கி, சேதுமடைந்துள்ள எலும்பு மஜ்ஜையை செயலிழக்க செய்கின்றனர். 

பிறகு ஆரோக்கியமான ஸ்டெம் செல்களை நோயாளிகளின் நெருங்கிய உறவினர்களிடமிருந்தோ அல்லது நோயாளிகளிடமிருந்தோ அல்லது நன்கொடையாளர்களிடமிருந்தோ பெற்று, அதனை சுத்திகரித்து நோயாளியின் உடம்பு உடலில் செலுத்துவர்.

பிறகு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் உடலில் செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்களை செயல்பட வைத்து, அவர்களுடைய நோய்க்கு தீர்வு காண்பது தான் இந்த சத்திர சிகிச்சையின் பிரதான நோக்கம்.‌

இதற்கு முதலில் ஆரோக்கியமான ஸ்டெம் செல் அவசியம். இதனை நோயாளிகளின் உறவினர்களிடமிருந்தோ அல்லது நன்கொடையாளர்களிடமிருந்தோ நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பெறுவர்.

இதனைத் தொடர்ந்து நோயாளியின் உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு திறன், வயது, ஏனைய உடல் கோளாறுகள் ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதன் பிறகு இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொள்வர்.

நோயாளியின் உடலில் செலுத்தப்பட்ட ஆரோக்கியமான ஸ்டெம் செல்கள் உடலுக்குள் சென்று விரிவடைந்து பல்கி பெருகி செயல்படுவதற்கு மூன்று வார கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். இதற்காக நோயாளியை பிரத்யேக கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்தியர்கள் வைத்திருந்து கண்காணிப்பர்.

மூன்று வார காலகட்டத்திற்குப் பிறகு உடலில் செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள் செயல்படத் தொடங்கி நோயாளி குணமடைய  தொடங்குவர். இதுதான் இந்த சத்திர சிகிச்சையின் செயல்முறை.‌

இந்த எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை, ஒட்டோலோகஸ் மற்றும் அல்லோஜெனிக் என இரண்டு வகையினதாக உள்ளது.

ரத்தப் புற்று நோயாளிகள், எலும்பு மஜ்ஜை செயலிழந்த நோயாளிகள், தாலசீமியா, சிக்கில் செல் அனீமியா ஃபேன்கோனி அனீமியா போன்ற மரபணு சார்ந்த குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வு ஆகும்.‌

தற்போது மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களின் வழிகாட்டுதலுடன் இத்தகைய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால்  இத்தகைய சத்திர சிகிச்சை பாதுகாப்பானதாக மாற்றம் பெற்றிருக்கிறது. இருப்பினும் சில நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறையை முழுமையாக உறுதியாகவும் பின்பற்ற வேண்டியதிருக்கும்.

வைத்தியர் வினோத்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-17 17:34:21
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45
news-image

வெறும் 10 நாட்கள் போதும்… வித்தியாசத்தை...

2025-04-16 16:00:35
news-image

பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

2025-04-16 15:34:29
news-image

சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கோணப்...

2025-04-16 12:55:52
news-image

லாரிங்கோபார்னீஜியல் ரிஃப்ளெக்ஸ் எனும் தொண்டை பாதிப்பிற்குரிய...

2025-04-16 03:48:16
news-image

கறுப்பு நிற உணவுகளில் உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள்

2025-04-13 12:52:03
news-image

கிரியாட்டீன் பவுடரை பாவித்தால் பக்கவிளைவு ஏற்படுமா?

2025-04-12 17:37:22
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் அதியுயர் வெப்பநிலை...

2025-04-11 16:30:48
news-image

பாடாய் படுத்தும் மன அழுத்தத்திலிருந்து விடுபட...

2025-04-10 14:24:20
news-image

பற்களின் பாதுகாப்புக்கு இப்படி செய்யுங்கள்

2025-04-09 15:21:33
news-image

சத்துக்கள் நிறைந்த முலாம்பழ விதை

2025-04-09 13:36:35