எம்முடைய இளைய தலைமுறையினர் தற்போது புத்திசாலித்தனமான விடயங்களை கண்டறிந்து அதனை வணிக நோக்கில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய விற்பனையை அறிமுகப்படுத்தி அதனூடாக தங்களை தொழிலதிபர்களாக முன்னிறுத்திக் கொள்கிறார்கள். பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய வணிகம் என்பது நாளாந்தம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றம் கொண்டது.
மக்களின் தேவைகள், வசதிகள், சௌகரியங்கள், விலை, பயன்படுத்துதலில் எளிமை போன்ற பல விடயங்களை மையமாகக் கொண்டது.
இதில் ஏதேனும் புதுப்பித்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது தாமதப்படுத்தினாலோ தொழிலில் நஷ்டத்தை சந்திக்க கூடும்.
இவர்கள் தங்களுடைய தொழிலில் நஷ்டம் அடையாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் குடும்ப ஜோதிடர் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் வழிகாட்டுதலை பெற வேண்டும். இதற்கும் எம்முடைய முன்னோர்கள் எளிய பரிகாரங்களை வழங்கியிருக்கிறார்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் உள்ள அல்லது பத்தாமிடத்தின் அதிபதி மிதுன ராசியில் இருந்தால் உதாரணமாக நீங்கள் மிதுன லக்னமாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பத்தாம் இடமான மீன வீட்டின் அதிபதியான குரு உங்களுடைய ராசி கட்டத்தில் மிதுன ராசியில் இருந்தால் அதாவது லக்னத்திலேயே இருந்தால் எம்மாதிரியான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக மிதுன லக்னக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் திறமைசாலிகளாகவும் இருப்பர். ஆனால் திட்டமிடுதலில் ஏதேனும் சிறிய குறைபாடுகள் இருந்தாலும் இவர்கள் தொழிலில் பெரிய நஷ்டத்தை சந்திக்க கூடும் என முன்னோர்கள் எச்சரிக்கிறார்கள்.
மீனுக்கு பொரி போன்ற பிடித்த உணவுகளை தானமாக வழங்கிட வேண்டும். பொதுவாக ஆலயங்களில் உள்ள புனித தீர்த்தங்களில் மீன்கள் இருக்கக்கூடும் அல்லது ஊரில் உள்ள குளங்களில் மீன்கள் இருக்கக்கூடும். அந்த மீன்களுக்கு பொரி மற்றும் மீனுக்கு பிடித்த உணவுகளை தானமாக வழங்கிட வேண்டும்.
நீங்கள் வணிகத்தலத்தில் இருந்தாலும் அல்லது தொழில் நடத்தும் இடத்தில் இருந்தாலும் அந்தத் தருணத்தில் யாரேனும் உங்களை அணுகி புனித யாத்திரைக்கு செல்கிறோம் என்று கூறினால் அவர்களுக்கு அரிசியை அதாவது பச்சரிசியை தானமாக வழங்க வேண்டும்.
பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களையும், சிறுமிகளையும் எந்த தருணத்திலும் எக்காரணம் கொண்டும் கடுஞ்சொற்களால் ஏசக்கூடாது. உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் நெருக்கடி காரணமாகவோ இவர்களை கடுஞ்சொற்களால் ஏசினால் இதன் காரணமாகவே உங்களுடைய தொழிலில் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக வாடிக்கையாளர்கள் வருவார்கள். பொருளைப் பற்றி விசாரிப்பார்கள். அவர்களுக்கு வாங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். இருந்தாலும் இறுதியில் வாங்காமல் திரும்பிச் சென்று விடுவர். இது உங்களுக்கு நஷ்டம் தானே..! இது சிறிய உதாரணம் தான். சிறார்களை கடுஞ்சொற்களால் ஏசாதீர்கள்.
பச்சை வண்ண ஆடையை உடுத்துவதையும், பச்சை வண்ண கல் பொருத்திய மோதிரத்தை அணிவதையும் தவிர்க்க வேண்டும். அன்பின் காரணமாக இதனை அணிந்து கொண்டிருந்தால் இதனால் தொழிலில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும். சில சோதிட நிபுணர்கள் மரகத பச்சைக் கல்லை அணியலாம் என பரிந்துரைப்பர். அவை தற்காலிகமான பலனை தருமே தவிர நீண்ட காலத்திற்கு பலனை வழங்காமல் தொல்லைகளையும், குறுக்கீடுகளையும், புதிய போட்டியாளர்களையும், அதன் மூலமாக சிக்கலையும் தொழிலில் உண்டாக்கும். அதனால் மரகத பச்சைக்கல் அணிவதை தவிர்க்கலாம்.
காலையில் எழுந்ததும் பல் துலக்கும் போது கண்ணாடியை பார்த்து பல் துலக்கும் பழக்கம் இருந்தால் அதனை இன்றே கைவிட்டு விடவும். ஏனெனில் கண்ணாடியை பார்த்து பல் துலக்குவதால் தொழிலில் குழப்பம் ஏற்படும்.
தொழிலில் புதிய புதிய நுணுக்கங்களையும், விடயங்களையும் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை எளிதில் கவர்வதில் இயற்கையாகவே ஆர்வம் கொண்ட மிதுன ராசிக்காரர்களான நீங்கள் புதிய விடயங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்கான தெளிவான திட்டமிடலை பலமுறை அவதானித்து அதனை செயல்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குளறுபடி நடந்தால் அதன் காரணமாக வளர்ச்சி தேக்கமடையும். தெளிவான திட்டமிடலே உங்களுடைய வளர்ச்சியில் அடித்தளமாகும்.
நீங்கள் எந்த லக்னமாக இருந்தாலும் உங்கள் லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி மிதுன ராசியில் இருந்தால் இந்த பரிகாரங்களை தொடர்ச்சியாக செய்தால் தொழிலில் எதிர்பார்க்காத அளவிற்கு முன்னேறி தொழிலதிபராக உயர முடியும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM