இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக முன்னிலையில் திகழ்ந்து வருகின்ற Huawei, இலங்கையில் சில்லறை விற்பனையில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்துடன் இணைந்து, இந்த ஆண்டு புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுவதற்காக விசேட கடனட்டை சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சலுகையின் கீழ், Huawei ஸ்மார்ட்போன் ஒன்றை புதிதாகக் கொள்வனவு செய்யும் போது சம்பத் கடனட்டை வாடிக்கையாளர்கள் அனைவரும் 20 மாதங்கள், 12 மாதங்கள், 6 மாதங்கள் வட்டியில்லா தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களின் கீழ் அவற்றை கொள்வனவு செய்ய முடிவதுடன், சிங்கர் கடனட்டை வாடிக்கையாளர்கள், 12 மாதங்களுக்கான வட்டியில்லா தவணைக் கொடுப்பனவுச் சலுகையை பெற்றுக்கொள்ள முடியும்.

கொமர்ஷியல் வங்கி, எச்எஸ்பிசி, செலான் வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி கடனட்டை வாடிக்கையாளர்கள் அனைவரும் 6 மாதங்களுக்கான வட்டியில்லா தவணைக் கொடுப்பனவுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

Huawei Device இலங்கைக்கான தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்து வெளியிடுகையில்,

“நாட்டில் முன்னிலை வகிக்கின்ற ஒரு ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற வகையில்ரூபவ் எமது தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்காவுடன் இணைந்து, இப்புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் உயர் தரம் கொண்ட Huawei ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதை எதிர்பார்த்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா, நாடெங்கிலுள்ள சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள் உட்பட, 400 இற்கும் மேற்பட்ட விற்பனைக் காட்சியறைகள் மற்றும் 1500 முகவர் விற்பனை மையங்களைக் கொண்ட சிங்கரின் டிஜிட்டல் விநியோக மார்க்கம் ஆகியவற்றை அடக்கிய நாட்டின் மிகப் பாரிய விற்பனை வலையமைப்பின் மூலமாக இவை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும்.

பெறுமானத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற மற்றும் புத்தாக்கமான உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதை Huawei தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றது. Brand Finance வெளியிட்டுள்ள தரப்படுத்தலின் பிரகாரம், 2016 ஆண்டில் உலகில் மிகவும் பெறுமதிமிக்க 100 வர்த்தகநாமங்கள் பட்டியலில் Huawei, 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

Interbrand வெளியிட்டுள்ள மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்களின் தரப்படுத்தல் தொடர்பில், உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியலில் Huawei, சமீபத்தில் 72 ஆவது ஸ்தானத்திற்கு திடீர் முன்னேற்றம் கண்டுள்ளது.