உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இலங்கையர்கள் நாடு திரும்பினர்

27 May, 2024 | 01:31 PM
image

(நெவில் அன்தனி)

ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற இலங்கை பரா வீரர்களும் அப் போட்டியில் பங்குபற்றிய ஏனைய பரா வீரர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நாடு திரும்பினர்.

அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை பரா  மெய்வல்லுநர் சங்கத் தலைவர் கேணல் தீபால் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

கோபேயில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லநர் சம்பின்ஷிப்பில் இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.

இலங்கைக்கு கிடைக்கவிருந்த மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம், ஆட்சேபனை காரணமாக அற்றுப்போனது.

கடந்த திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஆண்களுக்கான T44 வகைப்படுத்தல் பிரிவில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.83 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்ற நுவன் இந்திக்க கமகேவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

கோபே உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் அதுவாகும்.

அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டிய சமித்த துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப் போட்டியில் சமித்த துலான் கொடிதுவக்கு தனது முதலாவது முயற்சியில் ஈட்டியை 66.49 மீற்றர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை நிலைநாட்டினார்.

ஆனால் அவர், F64 வகைப்படுத்தல் பிரிவுக்கான ஒட்டுமொத்த நிலையில் 2ஆம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

F42, F43, F44, F64 ஆகிய நான்கு வகைப்படுத்தல் பிரிவுகளைச் சேர்ந்த பரா மெய்வல்லுநர்கள் பங்குபற்றிய இப் போட்டி கு64 என்ற ஒற்றைப் பிரிவின் கீழ் நடத்தப்பட்டது.

போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இலங்கையின் பரா வீரர் பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப்போட்டியில் தனது 4ஆவது முயற்சியில் குண்டை 14.27 மீற்றர் தூரத்திற்கு எறிந்து பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இது இவ்வாறிருக்க கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் இரணடாம் இடத்தைப் பெற்ற தினேஷ் ப்ரியன்த ஹேரத்துக்கு எதிராக ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டதால் அவருக்கு கிடைக்கவிருந்த வெள்ளிப் பதக்கம் பறிபோனது.

இவர்களைவிட பெண்களுக்கான T47 வகைப்படுத்தல் பிரிவு நீளம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய ஜனனி தனஞ்சன (5.08 மீ.) ஏழாம் இடத்தைப் பெற்றார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட தூரப் பெறுதியாகப் பதிவானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை;...

2024-06-15 16:23:37
news-image

சமரி அத்தபத்தவுக்கு மீண்டும் ஐசிசி விருது...

2024-06-15 10:36:16
news-image

அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால்...

2024-06-15 06:57:40
news-image

ஆப்கானிஸ்தன் உள்ளே ! நியூஸிலாந்து வெளியே...

2024-06-14 13:52:46
news-image

பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப்...

2024-06-14 01:42:11
news-image

நிறுத்தக் கடிகார விதிகளின் பிரகாரம் அபராதம்...

2024-06-13 17:39:33
news-image

சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்;...

2024-06-13 11:11:44
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நியூஸிலாந்துக்கு...

2024-06-13 01:48:40
news-image

ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்ட இந்தியா சுப்பர்...

2024-06-13 01:03:23
news-image

பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள இந்தியா -...

2024-06-12 14:45:17
news-image

நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக...

2024-06-12 10:16:02
news-image

கடும் மழையினால் இலங்கையின் சுப்பர் 8...

2024-06-12 09:55:49