சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத் அரசாங்கத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் யுத்த குற்றங்களி;ல் ஈடுபட்டனர் என பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற விசாரணைகளின்போது சிரிய அதிகாரிகள் மனித குலத்திற்கு எதிரான மற்றும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இல்லாதநிலையில் ஆயுள்தண்டனை விதித்துள்ளது.
சிரியாவின் இரகசிய புலனாய்வு பிரிவின் தலைவரும் ஜனாதிபதி அசாத்தின் ஆலோசகருமான அலி மம்லூக் 2019 வரை சிரியாவின் விமானப்படையின் புலனாய்வு பிரிவின் தலைவராக செயற்பட்ட ஜமீல்ஹசன் சிரியாவின் மிகவும் பயங்கரமான மெசே தடுப்புமுகாமின் புலனாய்வு இயக்குநர் அப்தெல் சலாம் மெஹ்மூட் ஆகியோருக்கு எதிரான இந்த தீர்ப்பு சர்வதேச நீதியின் நீண்ட கரங்கள் குறித்த வலுவான செய்தியை தெரிவித்துள்ளது.
சிரியாவின் மூன்று அதிகாரிகளிற்கும் எதிரான சர்வதேச பிடியாணை தொடர்ந்தும் செல்லுபடியாகும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிரிய அரசாங்கத்திற்காக பணியாற்றிய அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பத்தவர்களிற்கு நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
பிரான்ஸ் சிரிய பிரஜைகளான 20 வயது டாபா அவரது தந்தையான 48 வயது மஜீன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறித்தே சிரிய அதிகாரிகளிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
2013 அல் டபா அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார் அவ்வேளை அவர் டமஸ்கஸ் பல்கலைகழகத்தில் இரண்டாம் வருட மாணவனாக கல்வி பயின்று வந்தார் அவரது தந்தை கல்வி ஆலோசகராக பணியாற்றிவந்தவர் மறுநாள் கைதுசெய்யப்பட்டார்.
இருவரும் சிரிய விமானப்படையின் புலனாய்வு பிரிவின் இரகசிய முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர் இந்த முகாம் மோசமான சித்திரவதைகள் இடம்பெறும் பகுதி என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் உயிரிழந்துவிட்டனர் என 2018 இல் சிரிய அதிகாரிகள் குடும்பத்தவர்களிற்கு அறிவித்தனர் எனினும் உரிய காரணங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM