வாழைச்சேனையில் கார் விபத்தில் கணவன் - மனைவி படுகாயம்!

Published By: P. Saranya

27 May, 2024 | 10:10 AM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பகுதியில் கார் விபத்தில் கணவன் மற்றும்  மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று (27) திங்கட்கிழமை காலை 5 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவர் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர்.

காரில் பயணித்து மூன்று பிள்ளைகளும் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் காயமடைந்த கணவனும் மனைவியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56
news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54
news-image

சர்வதேச அமைப்புகளை அவமதிப்பது புரிதலின்மையை வெளிப்படுத்துகிறது;...

2026-09-09 16:45:30
news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29