மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக வினியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தல் இன்றி ஞாயிற்றுக்கிழமை (26) மாலை முதல் தடைப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மன்னார் நகர பகுதியில் உள்ள அதிகமான மக்கள் தமது வீடுகளுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் இணைப்பை பெற்று தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக முன் அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னர் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும்.
எனினும் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை முதல் தற்போது வரை நீர் வினியோகம் எவ்வித அறிவித்தலும் இன்றி தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கான பொறியியலாளர் ஒருவர் நிரந்தரமாக இல்லாத நிலையில் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
மன்னார், சின்னக்கடை பிரதான வீதியில் நீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாரிய நீர் கசிவை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM