நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை 26 ஆம் திகதி. ஞாயிற்றுக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது போகாவத்தை, அக்கரபத்தனை, போடைஸ், சாஞ்சிமலை மற்றும் பொகவந்தலாவ பகுதியில் டியன்சின், கெம்பியன் பெற்றோசோ ஆகிய பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதேவளை பெருந்தோட்ட தொழிலாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் 1700ரூபாய் சம்பளம் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்திற்குப் பணிப்புரை விடுத்தார்.
இதன் போது இந்த நேரடி சந்திப்பில் தொழிலாளர் காங்கிரஸின் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கொட்டகலை பிரதேச சபை முன்னாள் தலைவர் ராஜமனி பிரசாந்த், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல், அக்கரபத்தனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கதிர்ச்செல்வன், அமைச்சரின் இனைப்பு செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM