வவுனியாவில் பல்வேறு இடங்களில் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்ற  மாடுகளை நகரசபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. 32 மாடுகள் கட்டாக்காலியாக வீதியில் நின்ற போது பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பூந்தோட்டம், கோவில்குளம் போன்ற பகுதிகிளில் வீதியில் படுத்திருந்த போது இவை பிடிக்கப்பட்டள்ளதாகவும் 13 மாடுகள் இன்று உரிமையாளர்களினால் தண்டப்பணம் செலுத்தப்பட்டு மாடுகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் நகரசபை உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நடவடிக்கை தொடரும் என்றும் கட்டாக்காலி மாடுகள் வீதியில் விடப்பட்டிருந்தால் நகரசபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.