தமிழ், முஸ்லிம் இளைஞர்களே, உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இடம்கொடுக்க வேண்டாம் - நாமல்

Published By: Digital Desk 7

26 May, 2024 | 02:51 PM
image

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர் எனவே தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் அதேவேளை தமிழ், முஸ்லீம் இளைஞர்களிடம் விசேடமாக கேட்பது மிகவும் புத்திசாலித்தனமாக கலந்துரையாடி உங்களுடைய அரசியல் தீர்வுகளை எடுப்பதுடன் உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இடம் கொடுக்கவேண்டாம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் தேசிய அமைப்பாளரும் நா.உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறிலங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் கலந்துரையாடல் நாமல் ராஜபக்ஷ மாவட்டஅமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் ஈஸ்லகுன் ஹோட்டலில்  நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றது இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.   

தமிழ் மக்கள் மிகலும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் ஏன் ஏன்றால் ஒவ்வொரு நாளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர் பிரதேசத்திலுள்ள அரசியல்கட்சிகள்  மக்களின் வாக்குகளை தமது தேவைக்கு பாவிக்கின்றனர்

அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் அந்த தேர்தலில் எமது கட்சி வேட்பாளராக தமிழ். சிங்கள், முஸ்லீம், பறங்கிய, மலேய மக்களால் பிடிக்க கூடிய ஒருவரையே வேட்பாளராக முன்னிலைப்படுத்துவோம்.    

வரலாற்றை எடுத்துக் கொண்டால் மந்திரிமார் அமைச்சர்மார் போன்ற உரிய அரசியல் வாதிகளுக்கு எந்த பிரச்சனையும் வந்ததாக இல்லை ஆனால் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அபிவிருத்தி வேலை செய்தது மஹிந்த ராஜபக்ஷ, அவர்களே  அவருக்கு வாக்குகள் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் இந்த நாட்டில் வாழும் தமிழர்களே, சிங்களவர்களே, முஸ்லீம்களே, பறங்கியர்களே, மலேயர்களே என  எல்லோரும் ஒரே நாடு என அபிவிருத்தி செய்யவேண்டும் என அவர் செய்தார்

மஹிந்த ராஜபக்ஷ காலத்திலே அதிக அபிவிருத்தியை செய்தோம் அப்போது மத்தளை அதிவேக பாதையை அறுகம்பை ஊடாக மட்டக்களப்பு வரைக்கு கொண்டுவர திட்டமிட்டோம் ஆனால் ஆட்சி மாறியதால் அதனை செய்யமுடியாமல் போனதுடன் அந்த ஆட்சி காலத்தில் பல்வேறுபட்ட அபிவித்தி செய்யமுடியாமல் போனது.

அதேவேளை நல்லாட்சி காலத்திலே இலங்கை முழுவது அந்த அபிவிருத்தி  முடக்கப்பட்டதுடன் அந்த ஆட்சி காலத்தில்தான் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது அது கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சியில் தான் அந்த கெட்ட பெயர் வந்தது.

நல்லாட்சி காலத்திலே அபபிவிருத்தி வேலைகள் முடக்கப்பட்டு  கைத்தொழில்கள் முடக்கப்பட்டு சகல வேலைகளும் நிறுத்தப்பட்டதால் தான் கேட்டாபாய ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த சவாலுக்க முகம் கொடுக்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டது

இதன் பிறகு நல்லாட்சி காலத்தில் உயிர்த ஞாயிறு தாக்குதல் ஏற்பட்டதையடுத்து  ஆட்சி பொறுப்பை  கோட்டபாய பெறுப்பேற்ற போது கொவிற் 19 ஏற்பட்டது அப்போது மட்டக்களப்பிற்கு அதிகமான தடுப்பூசியை வழங்க நடவடிக்கையை மேற்கொண்டு ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர், வைத்தியர்கள, சுகாதார உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உட்பட அனைவருக்கும் வழங்கினோம் இந்த நிலையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலை ஏற்பட்டது .

அதன் காரணமாக எங்களிடமிருந்து ஆட்சி அதிகாரம் இடைநடுவில் மாற்றப்பட்டது அதனால் ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக நியமித்தோம்.  

எங்களுக்கு கிராம மட்டத்தில் போதியளவு அபிவிருத்திகள் செய்யப்படாவிட்டாலும் ஓரளவிற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றது இனிவரும் தேர்தலுக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது மட்டக்களப்பில் கட்சியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் எங்கள் ஆணிவேர்கள் எனவே எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுக்க நீங்கள் செயற்படுவீர்கள் என நம்புகின்றேன் .

அதேவேளை வியாபாரத்துறையில் வரிபிரச்சனை பட்டதாரிகள் பிரச்சனை உட்பட சகல துறைகளிலும் குறைபாடுகள் இருக்கின்றது கோட்டபாய ஆட்சிக்கு பிறகு பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படவில்லை தனியர்துறையில் தொழில் ஊக்குவிப்பு இல்லை பாடசாலைகள் கோவில்கள்.பள்ளிவாசல்கள் குறைபாடுகள் இருக்கின்றது

எனவே நாங்கள் இதை கட்டம் கட்டமாக நிறைவேற்றிக்கொள்ள ஒரு ஆளுமையான ஆட்சியை உருவாகி கொள்ளவேண்டும் தேர்தல் காலங்களில் இருக்கின்றவர்கள் தேர்தல் முடிந்த பின்னர் இல்லாமல் போய்விடுகின்றனர்.

எங்கள் பிரதேசத்திலும் தேர்தல் காலத்தில் ஒவ்வொரு தலைப்பிலே வருகின்றனர் பின்னர் தேர்தல் முடிந்ததும் மாயமாகி விடுவார்கள் எனவே எங்களுடைய கட்சியில் வெற்றிபெற்று ஒருவரை தாருங்கள் அப்போது  அவருக்;கு அதிகபட்ச உதவிகளை செய்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை நல்லதோரு பயணத்துக்கு ஏற்பாடு செய்யமுடியும்.

அதேவேளை சந்திரகுமார் நன்றி அவர் மிகலும் கஸ்டப்பட்டு வேலை செய்கின்றார் ஒவ்வொரு நாளும் கட்சி காரியாலயத்துக்கு உங்கள் குறைபாடுகiளின் கடிதங்களை கொண்டுவந்து அதற்கான வேலைகளை செய்துகொண்டிருப்பார் எனவே  நீங்கள் உங்கள் பிரதேசங்களுக்கு சென்று பிரச்சனைகளை அடையாளம் கண்டு சமர்ப்பியுங்கள் இதனை ஊர் மக்களிடம் தெரிவியுங்கள் நாங்கள் பலமடைய இணைந்து செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் அமைச்சருடன் இணைந்து வேலை செய்கின்றோம் நாங்கள்  தேர்தல் அண்மிக்கும் போது கூட்டணி  எவ்வாறு கொண்டு செல்வோம் என அறிவிப்போம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

2024-09-18 17:30:45
news-image

வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில்...

2024-09-18 17:29:26
news-image

மக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்...

2024-09-18 17:56:48
news-image

படத்திலிருக்கும் பெண்ணைக் கண்டால் பொலிஸாரிடம் அறிவியுங்கள்...

2024-09-18 17:27:40
news-image

ஏற்கக்கூடிய அரசாங்கத்தை அணுகாமைக்கான மூன்று காரணங்களை...

2024-09-18 17:24:16
news-image

நாவுலவில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

2024-09-18 16:55:20
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகை பணத்தைத்...

2024-09-18 17:04:53
news-image

சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை -...

2024-09-18 17:01:48
news-image

மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை...

2024-09-18 16:30:03
news-image

தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது ;...

2024-09-18 16:51:03
news-image

வீணடிக்காமல் வாக்குகளை பயன்படுத்துங்கள் - சஜித்  

2024-09-18 16:47:17
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும்...

2024-09-18 16:42:11