(பா.ருத்ரகுமார்)

நல்லாட்சி அரசாங்கத்தினால் பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வினைத்திறனான முறையில் தனது விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் ஏல சபையிலுள்ள அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் நீக்குவதற்கு மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தீர்மானித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற சர்ச்சைக்குறிய பிணைமுறி ஏலம் தொடர்பில் மத்திய வங்கியின் ஏல சபை உறுப்பினர்கள் பினைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளனர். 

எனவே இதன்பின்னர் ஆணைக்குழுவின் விசாரணைகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த தீர்மானம் எடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது