ஜனாதிபதி தலைமையில் பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு விஜயகலா வரவேற்பு!

Published By: Digital Desk 7

26 May, 2024 | 10:31 AM
image

ச்சமின்றி பெண்கள் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய நிலையை ஜனாதிபதி உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி நேற்று (25) முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உறுமய” திட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதியின் 45 வருட சேவையை 5 நிமிடங்களில் சுருக்கிச் சொல்ல முடியாது. வட மாகாணத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ்ந்தனர் என்று அறிவோம். அதனால் அடுத்த மாதங்களில் பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்களை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கூறுவது சிறந்த விடயமாகும்.

அதனால் நாடளாவிய ரீதியிலிருக்கும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பு பெறுவர். மொழிப் பிரச்சினையால் அதிகாரிகளிடம் பெண்களின் பிரச்சினைகளை விளக்கமாக கூற முடியாத நிலை இருந்தது. அச்சமின்றி பெண்கள் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய நிலையை ஜனாதிபதி உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி சொல்கிறேன்.

தமிழ் மக்களின் காணி விடுவிப்பு பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வினை வலியுறுத்தினார். அதேபோல் காணி உறுதிகளையும் வழங்குகிறார். அதனால்தான் அவர் சர்வதேச ரீதியாக மதிக்கப்படுகிறார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு - பூனொச்சிமுனையில் மீன்பிடி படகு...

2024-06-23 19:57:32
news-image

நெடுந்தீவு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை...

2024-06-23 19:22:22
news-image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் :...

2024-06-23 19:18:00
news-image

மாணவனைத் தாக்கிய சம்பவத்தில் ஒரே பாடசாலையில்...

2024-06-23 19:38:52
news-image

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்...

2024-06-23 19:19:24
news-image

பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த...

2024-06-23 19:34:03
news-image

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரின்...

2024-06-23 19:13:36
news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46
news-image

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல்...

2024-06-23 18:07:07
news-image

நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று...

2024-06-23 16:46:21