ஹப்புத்தளையில் வீட்டின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் பலி : இருவர் படுகாயம் !

26 May, 2024 | 07:55 AM
image

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை இரவு (25) சுமார் 7.30 மணியளவில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தில் 80 வயதுடைய ஆண் ஒருவரும் 73 வயதுடைய பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில் பங்கெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தில் மரணித்த பெண் மரம் முறிந்து விழுந்த வீட்டில் சுமார் 20 வருட காலமாக வீட்டு வேலை பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வீட்டின் மீது மரம் முறிந்து விழுகையில்  குறித்த பெண் வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என்று...

2024-06-15 18:12:22
news-image

தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை...

2024-06-15 18:29:03
news-image

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும்...

2024-06-15 16:55:52
news-image

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்...

2024-06-15 16:39:31
news-image

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய...

2024-06-15 16:56:44
news-image

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின்...

2024-06-15 15:11:12
news-image

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப்...

2024-06-15 15:43:02
news-image

அடுத்த வாரம் இலங்கை வருகிறார் இந்திய...

2024-06-15 15:18:37
news-image

10 ஆவது சர்வதேச யோகா தினத்தை...

2024-06-15 14:41:09
news-image

கண்டியில் சக மாணவனை கத்தியால் குத்திய...

2024-06-15 13:44:03
news-image

மயிலை வேட்டையாடி உண்ட வெளிநாட்டவர்களும் வேடுவ...

2024-06-15 14:40:39
news-image

இன்றைய மரக்கறி விலைகள்

2024-06-15 13:15:00