(லியோ நிரோஷ தர்ஷன்) 

அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு வழங்கவுள்ளது. இந்தியா  மௌனம்  காப்பது  வியப்பாக உள்ளது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்துவதற்கு யாரையும்  அனுமதிக்க மாட்டோம் என்று நாம் டில்லிக்கு கூறியிருந்தோம். ஆனால் அதனை அன்று இந்தியா நம்பவில்லை. இதற்காக ஆட்சி மாற்றத்திற்காக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கை வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.