பிரபல எழுத்தாளர் அமரர் நந்தினி சேவியற்றின் 75ஆவது பிறந்தநாள் நினைவுதினம் "எண்ணம் போல் வாழ்க்கை" அமைப்பினால் இன்று சனிக்கிழமை (25) நடத்தப்பட்டது.
திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் க.தீபகாந்தன் தலைமையில் நினைவுச் சுடரேற்றி விழா ஆரம்பமானது.
சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை விமர்சனம் என பல தளங்களில் நின்று செயற்பட்டவர்.
அதுமட்டுமின்றி ஈழத்து இலக்கிய வரலாறு நூல் எழுதப்படல் வேண்டும் என்ற கொள்கையில் நின்றுழைத்த இலக்கிய ஆளுமை அவர்.
இடதுசாரிச் சிந்தனை கொண்ட சண்முதாசனின் சீனச் சார்புடைய அணியில் இணைந்து செயற்பட்டவர்.
தமிழக எழுத்தாளர் நா.பார்த்தசாரதி போன்றோருடைய ஈழம் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க புறப்பட்ட கதிர்காமநாதன், பெனடிக்பாலன் கதிர்காமநாதன், டானியல் போன்றோருடன் இணைந்து இலக்கியம் படைத்தவர்.
சாதியத்தை எதிர்த்தவர்களில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது.தனக்குச் சரியெனப்பட்டதை துணிந்து எழுதிய எழுத்தாளர். தனது கதாபாத்திரங்களை விளிம்பு நிலை மக்களிடமிருந்தே தெரிவுசெய்த எழுத்தாளர்.
திருமலை நவம், ஷெல்லிதாசன் போன்ற வர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒருவர் இவருடைய "தவனம்" சிறுகதை ஆடிக் கலவரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவர் தன்னடக்கம் கொண்டவராக விளங்கினார் என பலர் தமது உரையில் குறிப்பிட்டனர்.
"கொரோனா" கொன்றொழித்தவர்களில் இவரும் அடங்கிப் போனமை துரதிஸ்டமே அன்னார் மறைந்து போனாலும் இன்னும் இலக்கிய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
இந்நிகழ்வில் அவருடைய மனைவி முதல் சுடரினை ஏற்றினார் நிகழ்வில் எமுத்தாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM